தென் சீனக் கடல் எல்லையில் அமெரிக்க போர்க்கப்பல்; ஜோ பைடனின் திட்டமா?

தினமலர்  தினமலர்
தென் சீனக் கடல் எல்லையில் அமெரிக்க போர்க்கப்பல்; ஜோ பைடனின் திட்டமா?

தென் சீன கடல் பகுதி எப்போதும் சர்ச்சைக்குரிய பகுதியாகவே விளங்கி வருகிறது. அவ்வப்போது இப்பகுதியில் அமெரிக்க கப்பல்படை தென் கொரியாவுடன் இணைந்து செல்லும்போது சீனாவுடன் மோதல் ஏற்படும்.
இது அடிக்கடி நிகழும் சம்பவம் ஆகிவிட்டது. அமெரிக்காவின் முந்தைய அதிபர் டொனால்டு டிரம்பின் ஆட்சிக்காலத்திலேயே இப்பகுதியில் அதிக சர்ச்சை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில் தைவான் உடன் நட்பு பாராட்டும் அமெரிக்கா அவ்வப்போது சீனாவின் கண்களை உறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது சீனாவுக்கு சொந்தமான தீவுகளின் அருகே அமெரிக்க கப்பல் படை அடிக்கடி கப்பலில் கடந்து செல்வதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இது அமைதிக்கு ஏற்ற வழி அல்ல என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சீன வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க போர் விமானங்களை சுமந்து செல்லும் கப்பல்களை சமீபத்தில் அமெரிக்கா தென் சீனக் கடல் பகுதியில் சுமந்து சென்றுள்ளது. யூஎஸ்எஸ் தியோடோர் ரூஸ்வெல்ட் என்ற ஓர் கப்பலும் கடந்த சனியன்று தென் சீனக் கடல் பகுதியில் கடந்து சென்றது.
அமெரிக்க அதிபராக ஆட்சிப்பொறுப்பேற்ற சில நாட்களில் அமெரிக்காவின் பலத்தை சீனாவுக்கு காண்பிக்க அமெரிக்கா திட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.


சீனா ஆக்கிரமித்துள்ள தீவுக்கு வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் உள்ளிட்ட பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. மேற்கண்ட இத்தனை நாடுகளுடனும் இந்த தீவுக்காக சீனா பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தீவின் கரை அருகே அமெரிக்க கப்பல்கள் கடந்து சென்றுள்ளன.

மூலக்கதை