வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டிராக்டர் பேரணி செல்லும் விவசாயிகளுக்கு திமுக ஆதரவு

தினகரன்  தினகரன்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டிராக்டர் பேரணி செல்லும் விவசாயிகளுக்கு திமுக ஆதரவு

சென்னை: குடியரசுதின நன்னாளில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கும், தமிழ்நாட்டில் விவசாயிகள் நடத்தும் பேரணி, ஒன்று கூடல்களுக்கும் திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. நாட்டின் திறன் காட்டும் வகையிலான அணிவகுப்பு நடைபெறும் குடியரசு நன்னாளில், நாட்டின் உயிர்நாடியான விவசாயிகள், தங்கள் வாழ்வுரிமைக்காக நடத்தும் டிராக்டர் அணிவகுப்பு அமைதியான முறையிலும் வெற்றிகரமாகவும் நடைபெற்றிட திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவினை வழங்குகிறது என கூறினார்.

மூலக்கதை