‘டுவென்டி–20’ தொடரில் ரசிகர்கள் * பி.சி.சி.ஐ., திட்டம் | ஜனவரி 24, 2021

தினமலர்  தினமலர்
‘டுவென்டி–20’ தொடரில் ரசிகர்கள் * பி.சி.சி.ஐ., திட்டம் | ஜனவரி 24, 2021

மும்பை: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ‘டுவென்டி–20’ தொடரில்  ரசிகர்களை அனுமதிக்க பி.சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரில் பங்கேற்கிறது. அடுத்து ஐந்து ‘டுவென்டி–20’, மூன்று ஒருநாள் போட்டிகளில்  விளையாடுகிறது. ‘டுவென்டி–20’ போட்டிகள் உலகின் மிகப்பெரிய ஆமதாபாத் மைதானத்தில்  மார்ச் 12ம் தேதி முதல் நடக்கின்றன. அப்போது 50 சதவீத ரசிகர்களை  அனுமதிக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறியது: இந்தியா, இங்கிலாந்து  மோதும் ‘டுவென்டி–20’ தொடரின் போது ரசிகர்களை அனுமதிக்க திட்டமிட்டு  வருகிறோம். ஆனால் எவ்வளவு ரசிகர்களை அனுமதிப்பது என இன்னும்  முடிவு செய்யவில்லை. எப்படியும் 50 சதவீத ரசிகர்கள் போட்டியை நேரில்  காண முடியும் என நம்புகிறேன். புதிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றி,  அரசின் அனுமதிக்குப் பின் இறுதி முடிவு எடுக்கப்படும்,’’ என்றார்.

மூலக்கதை