தவான் மீது நடவடிக்கையா * மாவட்ட நீதிபதி வேண்டுகோள் | ஜனவரி 24, 2021

தினமலர்  தினமலர்
தவான் மீது நடவடிக்கையா * மாவட்ட நீதிபதி வேண்டுகோள் | ஜனவரி 24, 2021

 வாரணாசி: தவான் பறவைகளுக்கு உணவு தர அனுமதித்தவர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி துவக்க வீரர் ஷிகர் தவான். தனது இன்ஸ்டாகிராம்  சமூக வலைதளத்தில், சில போட்டோக்கள் வெளியிட்டார். அதில்  வாரணாசியில் படகுப் பயணத்தின் போது, தவான் பறவைகளுக்கு உணவு  தருவது இடம் பெற்றிருந்தது. அதில்,‘பறவைகளுக்கு உணவு கொடுத்தது  மகிழ்ச்சியாக இருந்தது. 

தற்போது பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தவானின் இச்செயல்  பலருக்கும் வியப்பாக இருந்தது. வாரணாசி மாவட்ட நீதிபதி கவுஷல் ராஜ்  சர்மா கூறுகையில்,‘‘பொதுவாக சுற்றுலா பயணிகளுக்கு இங்குள்ள விதிகள்  தெரியாது. சில படகோட்டிகள் விதிகளை பின்பற்றுவதில்லை எனத்  தெரிகிறது. படகுப் பயணத்தில் பறவைகளுக்கு உணவு தர  அனுமதிக்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டிய அவசியம் இல்லை. சம்பந்தப்பட்ட படகோட்டி யார் என்பதை  கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’  என்றார்.

மூலக்கதை