தேசத்துக்காக விளையாடியது பெருமை * உற்சாகத்தில் நடராஜன் | ஜனவரி 24, 2021

தினமலர்  தினமலர்
தேசத்துக்காக விளையாடியது பெருமை * உற்சாகத்தில் நடராஜன் | ஜனவரி 24, 2021

 சேலம்: ‘‘பிறந்த எனது குழந்தையை விட தேசத்திற்காக விளையாடியதை நானும் எனது மனைவியும் பெருமையாக உணர்கிறோம்,’’ என நடராஜன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய தொடருக்காக வலைப்பயிற்சியில் சக வீரர்களுக்கு பந்து வீச சேர்க்கப்பட்டார் தமிழகத்தின் வேகப்பந்து வீச்சாளர் ‘யார்க்கர்’ நடராஜன் 29. கடைசியில் தனது சிறப்பான செயல்பாடு காரணமாக, ஒருநாள், ‘டுவென்டி–20’, டெஸ்ட் என மூன்றுவித போட்டிகளில் அறிமுகம் ஆன முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். 

ஆஸ்திரேலியா செல்லும் முன் நடராஜன் அப்பா ஆனார். இருப்பினும் குழந்தையை பார்க்காமல் ஆஸ்திரேலியா சென்றார். சில மாதங்களுக்குப் பின் இந்தியா திரும்பினார். 

இதுகுறித்து நடராஜன் கூறியது:

எங்களுக்கு பிறந்த குழந்தையை விட, தேசத்திற்காக விளையாடியதை நானும் எனது மனைவியும் பெருமையாக உணர்கிறோம். கடின உழைப்பு என்றும் வீணாகாது. அது எப்போதும் நமக்கு பலன் கொடுக்கத் தான் செய்யும். இந்திய அணியில் சக வீரர்கள் அதிக ஆதரவு கொடுத்தனர். ‘டிரசிங் ரூமில்’ உற்சாக வார்த்தைகள் வழங்கினர். இது மிகவும் உதவியாக இருந்தது. பிரிஸ்பேன் டெஸ்டில் பும்ரா, அஷ்வின் உள்ளிட்ட முன்னணி பவுலர்கள் இல்லாததால், புதிய வீரர்கள் மீது நெருக்கடி ஏற்பட்டது. எனக்கும் சற்று பதட்டம் இருந்தது. இருப்பினும் விக்கெட் வீழ்த்துவது மட்டும் தான் எனது முக்கிய எண்ணமாக இருந்தது. முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் சாய்த்தது, கனவு போல இருந்தது. 

இவ்வாறு அவர் கூறினார். 

மூலக்கதை