சென்னை டெஸ்டில் குல்தீப் * ரகானே நம்பிக்கை | ஜனவரி 23, 2021

தினமலர்  தினமலர்
சென்னை டெஸ்டில் குல்தீப் * ரகானே நம்பிக்கை | ஜனவரி 23, 2021

 சென்னை: ‘‘இங்கிலாந்து தொடரில் குல்தீப் யாதவ் விளையாடுவார்,’’ என துணைக் கேப்டன் ரகானே தெரிவித்தார். 

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 26. ஆஸ்திரேலிய சென்ற தொடரில் இடம் பெற்றார். 2019 தொடரில் சிட்னி டெஸ்டில் 5 விக்கெட்  வீழ்த்தினார். இம்முறை 20 வீரர்கள் மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்ட போதும், குல்தீப் யாதவ் ஒரு  டெஸ்டில் கூட விளையாடவில்லை. தற்போது  இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். இதுகுறித்து இந்திய அணி துணைக் கேப்டன் ரகானே கூறியது:

ஆஸ்திரெலிய மண்ணில் ஒரு டெஸ்டில் கூட விளையாடவில்லை என்பது குல்தீப்புக்கு கடினமாகத் தான் இருக்கும். தற்போது சொந்தமண்ணில்  விளையாட உள்ளோம். உங்களுக்கான நேரம் வரும். தொடர்ந்து கடினமாக போராடுங்கள்,’’ என்றார்.

இந்திய அணி பவுலிங் பயிற்சியாளர் பரத் அருணும், குல்தீப்புக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால் இந்தியா, இங்கிலாந்து அணிகள் சென்னையில்  மோதும் முதல் இரு டெஸ்டில் குல்தீப் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.

மூலக்கதை