எங்களை புறக்கணித்த ஆஸி., வீரர்கள் * அஷ்வின் புதிய புகார் | ஜனவரி 23, 2021

தினமலர்  தினமலர்
எங்களை புறக்கணித்த ஆஸி., வீரர்கள் * அஷ்வின் புதிய புகார் | ஜனவரி 23, 2021

சென்னை: ‘‘ஆஸ்திரேலிய வீரர்கள் ‘லிப்டில்’ செல்லும் போது, இந்திய வீரர்களை தங்களுடன் அனுமதிக்காதது விசித்திரமாக இருந்தது,’’ என அஷ்வின் தெரிவித்தார்.

சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் இனவெறி சர்ச்சை, கடுமையான தனிமைப்படுத்துதல் விதிகள் என இந்திய வீரர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் தரப்பட்டன. இதுகுறித்து இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதரிடம் கூறியது:

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக சிட்னி சென்ற போது எங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அடைத்து வைத்தனர். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும், ஒரே கொரோனா பாதுகாப்பு வளையத்தில் தான் இருந்தோம். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் லிப்டில் செல்லும் போது, இந்திய வீரர்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் மிக மோசமாக உணர்ந்தோம். நாங்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இருந்த போதும், ஆஸ்திரேலிய வீரர்கள் இப்படி நடந்து கொண்டது விசித்திரமாக இருந்தது. இதை ஏற்றுக் கொள்ளவே கடினமாக இருந்தது. 

இவ்வாறு அஷ்வின் கூறினார்.

மூலக்கதை