சீன ராணுவ வீரர்களுக்கு சம்பள உயர்வு

தினமலர்  தினமலர்
சீன ராணுவ வீரர்களுக்கு சம்பள உயர்வு

பீஜிங் : சீன ராணுவத்தினருக்கு, 40 சதவீத சம்பள உயர்வு அளிக்க, அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தை, சீனா சமீபத்தில் திருத்தியமைத்தது. இதன்படி, அதிபர் ஜிங்பிங் தலைமையிலான, சீன ராணுவத்தின் தலைமை அமைப்பான, மத்திய ராணுவ கமிஷனுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ராணுவத்தினருக்கு, இந்த ஆண்டு, 40 சதவீத சம்பள உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாக, சீன பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை