மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற ஐடி சோதனை நிறைவு

தினகரன்  தினகரன்
மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற ஐடி சோதனை நிறைவு

சென்னை: மத பிரச்சார கூட்டங்களை நடத்தி வரும் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார் வந்ததால் பால் தினகரனுக்கு சொந்தமான இயேசு அழைக்கிறார், காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 28 இடங்களில் 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். வங்கி கணக்கு பரிவர்த்தனைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை