இதுவரை 7.09 கோடி பேர் குணம்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.87 கோடியாக ஆக உயர்வு..!!!

தினகரன்  தினகரன்
இதுவரை 7.09 கோடி பேர் குணம்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.87 கோடியாக ஆக உயர்வு..!!!

நியூயார்க்: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக  நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 1 வருடம் ஆகிவிட்டது. இதன் வீரியம் தற்போது தான் குறைந்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 கோடியை 87 லட்சத்து 36 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7 கோடியை 09 லட்சத்து 11 ஆயிரத்து 582 பேர்  குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21 லட்சத்து 16 ஆயிரத்து 159 பேர்  உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 கோடியை 57 லட்சத்து 09 ஆயிரத்து 254 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1 லட்சத்து 11 ஆயிரத்து 239 பேர்  கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள்:அமெரிக்கா  -  25,390,042     இந்தியா        -  10,640,544     பிரேசில்        -  8,755,133     ரஷ்யா          -  3,677,352பிரிட்டன்        - 3,583,907பிரான்ஸ்        -  3,011,257ஸ்பெயின்    -  2,603,472இத்தாலி       - 2,441,854துருக்கி       -  2,418,472ஜெர்மனி     - 2,125,261 கொரோனா உயிரிழப்பு அதிமுள்ள நாடுகள்:அமெரிக்கா - 424,177பிரேசில்    -  215,299 இந்தியா - 153,221  மேக்சிகோ- 147,614 பிரிட்டன்    - 95,981இத்தாலி -  84,674பிரான்ஸ்   -  72,647கொரோனாவில் இருந்து அதிகம் குணமடைந்த நாடுகள்:அமெரிக்கா - 15,222,719     இந்தியா - 10,300,063     பிரேசில்    -  7,594,771ரஷ்யா      -  3,081,536துருக்கி       - 2,296,050

மூலக்கதை