ரத்து! கொரோனா தடையுத்தரவு... திருப்பரங்குன்றத்தில் தெப்பதிருவிழா தேரோட்டம்

தினமலர்  தினமலர்
ரத்து! கொரோனா தடையுத்தரவு... திருப்பரங்குன்றத்தில் தெப்பதிருவிழா தேரோட்டம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜன., 23) நடக்க இருந்த தெப்பத்திருவிழா தேரோட்டம் கொரோனா தடையுத்தரவால் ரத்தானது.

வழக்கமாக தெப்பத் திருவிழாவிற்கு முந்தையநாள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அலங்காரத்தில் ஜி.எஸ்.டி., ரோடு அருகேவுள்ள தெப்பக்குள கரையில் எழுந்தருள்வர். சிவாச்சார்யார்கள் யாகம் வளர்த்து பூஜைகள் முடிந்து சுத்தியல், அரிவாள், உளி ஆகியவற்றிற்கு பூஜைகள் நடக்கும். பின் தெப்ப தண்ணீரில் அமைக்கப்பட்டிருக்கும் மிதவை தெப்பத்தில் முகூர்த்தகால் கட்டப்படும்.

மூங்கிலால் சுவாமி தெப்பத்தை முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி நடக்கும். பின் 6கால் மண்டபம் முன் சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கும். கொரோனா தடையுத்தரவால் இந்தாண்டு தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சி, தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை