'இந்திய - அமெரிக்க உறவு மேலும் வலுவாகும்'

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்:அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளது அமெரிக்கா -- இந்தியா இடையிலான உறவை மேலும் வலுவடைய செய்துள்ளது' என வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் 56 சமீபத்தில் பதவியேற்றார். துணை அதிபராக பதவி ஏற்ற முதல் கருப்பின ஆசிய - - அமெரிக்க பெண் என்ற பெருமையை கமலா பெற்றுள்ளார். இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சக்கி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளது அமெரிக்க வரலாற்றில் சிறப்புமிக்க நாளாக கருதப்படுகிறது. இதன் வாயிலாக அமெரிக்கா -- இந்தியா இடையிலான உறவின் முக்கியத்துவம் மேலும் வலுவடையும்.அதிபர் ஜோ பைடன் பலமுறை இந்தியா சென்றுள்ளார். இரு நாட்டு தலைவர்களுக்கிடையே நீண்ட நாட்களாக தொடரும் நல்லுறவுக்கு அவர் மதிப்பளிக்கிறார்; அது மேலும் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை