அமெரிக்கா உடன் நல்லுறவை வலுப்படுத்த முன்னுரிமை

தினமலர்  தினமலர்
அமெரிக்கா உடன் நல்லுறவை வலுப்படுத்த முன்னுரிமை

புதுடில்லி:'அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசுடன் நல்லுறவை வலுப்படுத்துவதற்கு இந்தியா முன்னுரிமை அளிக்கும்' என வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

டில்லியில் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் பேசியதாவது:கடந்த ஆண்டு இறுதியில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதும் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.அடுத்த ஒருவாரத்தில் இருவரும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவது என இருவரும் உறுதி எடுத்தனர்.

இரு தினங்களுக்கு முன் ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற போதும் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பினார். அமெரிக்காவில் அமைந்துள்ள புதிய அரசுடன் அனைத்து மட்டங்களிலும் இந்தியா ஒருங்கிணைந்து செயல்படும். பொதுவான பிரச்னைகள் தொடர்பாக எழும் சர்வதேச சவால்களை இரு நாடுகளும் கூட்டாக எதிர்கொள்ளும்.அமெரிக்காவுடன் பன்முகத்தன்மை உடைய பரஸ்பர நல்லுறவுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை