எட்டி உதைத்தாரா ஆஸி., பயிற்சியாளர் | ஜனவரி 20, 2021

தினமலர்  தினமலர்
எட்டி உதைத்தாரா ஆஸி., பயிற்சியாளர் | ஜனவரி 20, 2021

பிரிஸ்பேன்: தோல்வியடைந்த கோபத்தில் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர், குப்பைத் தொட்டியை எட்டி உதைத்ததாக வீடியோ வெளியானது.

இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய நான்காவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 329/7 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், கேலரியில் இருந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். ரிஷாப் பவுண்டரி அடித்து இந்தியா வெற்றி பெற்றதும், கோபத்தின் உச்சிக்கே சென்று, அங்கிருந்த குப்பைத் தொட்டியை வேகமாக எட்டி உதைத்தார். அதேவேகத்தில், சிதறிய பொருட்களை மீண்டும் எடுத்து வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

ஆனால் இது ஏற்கனவே நடந்த சம்பவம் தான் என விளக்கம் தரப்பட்டது. வீடியோவில் உள்ள லாங்கர் ‘ஜெர்சிக்கும்’, நேற்று லாங்கர் அணிந்திருந்த ‘ஜெர்சியும்’ வெவ்வேறாக இருந்தன. கடந்த 2019, ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் ஹெட்டிங்லே மைதானத்தில் ஆக. 26ல் நடந்த சம்பவத்தை தற்போது வெளியிட்டது தெரிந்தது.

மூலக்கதை