விண்டீசை வென்றது வங்கதேசம் * 8 ரன்னுக்கு 4 விக்., சாய்த்த சாகிப் | ஜனவரி 20, 2021

தினமலர்  தினமலர்
விண்டீசை வென்றது வங்கதேசம் * 8 ரன்னுக்கு 4 விக்., சாய்த்த சாகிப் | ஜனவரி 20, 2021

தாகா; விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசம் சென்றுள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது, முதல் போட்டி நேற்று தாகாவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது. தடையில் இருந்து மீண்ட பின் முதல் போட்டியில் களமிறங்கினார் வங்கதேச அணியின் சாகிப் அல் ஹசன்

விண்டீஸ் அணியின் சுனில் அம்ரிஸ் (7), ஜோசுவா (9), மெக்கர்த்தி (12) ஏமாற்றினர். கைல் மேயர்ஸ் 40, பாவெல் 28 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்ற விண்டீஸ் அணி 32.2 ஓவரில் 122 ரன்னுக்கு சுருண்டது. சுழலில் அசத்திய சாகிப் அல் ஹசன், 8 ரன்கள் மட்டும் கொடுத்து, 4 விக்கெட் சாய்த்தார்.

எளிய இலக்கு

எளிய இலக்கைத் துரத்திய வங்கதேச அணியை லிட்டன் தாஸ் (14), நஜ்முல் (1), சாகிப் அல் ஹசன் (19) கைவிட்டனர். கேப்டன் தமிம் இக்பால் 44 ரன்கள் எடுக்க, வங்கதேச அணி 33.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. முஷ்பிகுர் (19), மகமதுல்லா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை