நீர்வாழ் உயிரின ஆய்வகம் படப்பையில் அடிக்கல்

தினமலர்  தினமலர்
நீர்வாழ் உயிரின ஆய்வகம் படப்பையில் அடிக்கல்

ஸ்ரீபெரும்புதுார்; படப்பையில், நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு, மத்திய மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், அடிக்கல் நாட்டினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, படப்பையில், 3 ஏக்கர் பரப்பளவில், நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்காக, மத்திய மீன்வளத் துறை சார்பில், 19.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக, 4 கோடி ரூபாய் மதிப்பில், ஆய்வகத்தின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது.மத்திய மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அடிக்கல் நாட்டினர்.இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் நீர்வாழ் உயிரினங்களை, இந்த ஆய்வகத்தில் தனிமைப்படுத்தி, நோய் தொற்று உள்ளனவா என, பரிசோதனை செய்யப்பட உள்ளது.மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதாவதுஅலங்கார மீன் ஏற்றுமதியில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யும் திறன், நம்மிடம் உள்ளது.

அலங்கார மீன் வளர்ப்பு முனையமாக, தமிழகம் அமைய வேண்டும். இத்திட்டத்தால், மீன்வளம் சார்ந்த பொருளாதாரம் மேம்படும்.கடல்பாசி வளர்ப்பிற்கு, முக்கியத்துவம் அளிக்க உள்ளோம். இதை, மகளிர்கள், மீனவர்கள் பயன்படுத்தி, தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ''சசிகலாவை கட்சியில் சேர்ப்பதில்லை. அவர் உடல் நலம் சீராக விரும்புகிறோம். இளைஞர்களை கவரும் கட்சியாக அ.தி.மு.க., உள்ளது,'' என்றார்.

மூலக்கதை