இதுவரை 7.04 கோடி பேர் குணம்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.80 கோடியாக ஆக உயர்வு..!!!

தினகரன்  தினகரன்
இதுவரை 7.04 கோடி பேர் குணம்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.80 கோடியாக ஆக உயர்வு..!!!

நியூயார்க்: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக  நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 1 வருடம் ஆகிவிட்டது. இதன் வீரியம் தற்போது தான் குறைந்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 கோடியை 80 லட்சத்து 51 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7 கோடியை 04 லட்சத்து 48 ஆயிரத்து 377 பேர்  குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 98 ஆயிரத்து 212 பேர்  உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 கோடியை 55 லட்சத்து 04 ஆயிரத்து 923 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1 லட்சத்து 11 ஆயிரத்து 301 பேர்  கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள்:அமெரிக்கா  -  25,188,157இந்தியா        -  10,626,200பிரேசில்        -  8,699,814  ரஷ்யா          -  3,655,839பிரிட்டன்        - 3,543,646பிரான்ஸ்        -  2,987,965ஸ்பெயின்    - 2,560,587துருக்கி       -  2,412,505இத்தாலி       - 2,428,221ஜெர்மனி     - 2,108,895    கொரோனா உயிரிழப்பு அதிமுள்ள நாடுகள்:அமெரிக்கா - 420,028    பிரேசில்    -  214,228  இந்தியா - 153,067     மேக்சிகோ- 1,44,371 பிரிட்டன்    - 94,580 இத்தாலி -  84,202பிரான்ஸ்   -  71,998 கொரோனாவில் இருந்து அதிகம் குணமடைந்த நாடுகள்:அமெரிக்கா - 15,100,991     இந்தியா - 10,282,889     பிரேசில்    -  7,580,741ரஷ்யா      -  3,054,218 துருக்கி       - 2,290,032

மூலக்கதை