மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் சிறப்பு முகாம்

தினமலர்  தினமலர்
மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் சிறப்பு முகாம்

சென்னை - மாற்றுத்திறனாளிகளுக்கான, வாக்காளர் பதிவு சிறப்பு முகாமில், 250க்கும் மேற்பட்டோர், தங்கள் பெயரை பதிவு செய்தனர்.சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏதுவாக, அதற்கான சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. முதல் கட்டமாக, அடையாறு மற்றும் தேனாம்பேட்டை பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில், புதிய வாக்காளர் பதிவு நடைபெற்றது. இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மாவட்ட அலுவலர் சுப்பிரமணி கூறியதாவது:முகாம்களில், மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டன.அடையாறு பள்ளியில் நடந்த முகாமில், 121 பேரும், தேனாம்பேட்டையில், 130 பேர் என, மொத்தம், 251 பேர் ஆர்வத்துடன் பங்கேற்று வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்தனர். ஒரு வாரத்திற்குள், அவர்களது மொபைல் எண்ணிற்கு வாக்காளர் எண் அனுப்பி வைக்கப்படும். இம்மாதம், 31ம் தேதி வரை நடக்கும் முகாம்கள் குறித்து தெரிந்துக் கொள்ள, 94999 33470, 94999 33617 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்களிலும், மாவட்ட அலுவலரின், 94454 97075 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை