வேதனை: என்.எல்.சி., மற்றும் இயற்கை பேரிடர்களால் விவசாயிகள்...கம்மாபுரம் வட்டாரத்தில் நிரந்தர தீர்வு காண கோரிக்கை

தினமலர்  தினமலர்
வேதனை: என்.எல்.சி., மற்றும் இயற்கை பேரிடர்களால் விவசாயிகள்...கம்மாபுரம் வட்டாரத்தில் நிரந்தர தீர்வு காண கோரிக்கை

விருத்தாசலம்; என்.எல்.சி., இரண்டாம் சுரங்க விரிவாக்கப் பணி மற்றும் இயற்கை பேரிடர்களால் விளை நிலங்கள் பாழாவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கம்மாபுரம் வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்மாபுரம் வட்டாரத்தில், 20 ஆயிரம் ஏக்கர் நெல் பயிரிடப்பட்டது. இதில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக 13 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாழாகின.குறிப்பாக, கனமழைக்கு வெள்ளம் பெருக்கெடுத்து மணிமுக்தாற்றின் இரு கரைகளை ஒட்டிய டி.பவழங்குடி, கீரமங்கலம், க.தொழூர், கோ.பொன்னேரி, கோ.ஆதனுார், கம்மாபுரம், சு.கீனனுார், பெருந்துறை உள்ளிட்ட கிராமங்கள் அதிக பாதிப்பை சந்தித்தன.மேலும், நெய்வேலி என்.எல்.சி., இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுரங்க மண் சு.கீனனுார், கம்மாபுரம் பகுதிகளில் மலைபோல் குவித்துவைக்கப்பட்டுள்ளது.கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த மண் மேடுகளைச் சுற்றியுள்ள வடிகால்களில் உடைப்பு ஏற்பட்டு, கம்மாபுரம் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால், நெற்பயிர்கள் பாழாகின.தற்போது மழை ஓய்ந்த நிலையில், எஞ்சிய நெற்பயிர்களை மீட்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சேறும் சகதியுமான நிலங்களில் இயந்திரம் மூலம் அறுவடை பணியை மேற்கொள்கின்றனர்.ஆனால், பாதியளவு மகசூல் கூட கிடைக்காது என விவசாயிகள்கவலையடைந்துள்ளனர்.வடிந்தது வெள்ளம்கம்மாபுரம் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் வடிந்து வருவதால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்பியது. ஆனால், மழை பெய்தாலே இந்த நிலை தொடர்வதால், அப்பகுதி மக்கள் மிகுந்தவிரக்தியடைந்துள்ளனர்.

நிரந்தர தீர்வு தேவைஇரண்டாம் சுரங்க மண் மேட்டைச் சுற்றியுள்ள வடிகால் துார்ந்துள்ளதால், கனமழை பெய்யும் போது வடிகால் உடைந்து, விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது.எனவே, சுரங்க மண் மேட்டில் இருந்து கம்மாபுரம் ஏரி வழியாகச் செல்லும் வாய்க்காலை அகலப்படுத்தி, கான்கிரீட் வரப்பு கட்டித்தர வேண்டும். இதனால் மழைநீருடன் மண் கலந்து வயல்களில் புகுவது தடுத்து நிறுத்தப்படும்.அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், 'புயல், வெள்ளம், மழையால் கடலுார் மாவட்டம் முழுமையாக பாதிக்கிறது.கம்மாபுரம் வட்டாரத்தில், 40க்கும் மேற்பட்ட கிராம விவசாய நிலங்கள் என்.எல்.சி.,யால் பெருமளவு பாதிக்கிறது. ஒருபுறம், அதிக ஆழத்திற்கு தண்ணீரை ராட்சத மின் மோட்டார்கள் மூலம் வெறியேற்றி, நிலத்தடி நீர்மட்டம் சரிந்து போனது.

மறுபுறம், சுரங்கத்தில் தேக்கி வைத்திருக்கிற மண் மேடுகளில் இருந்து தண்ணீரும் மண்ணும் சேர்ந்து வயல்வெளிமண் மேடாகிறது.இதற்கு நிரந்தர தீர்வாக என்.எல்.சி., ஊரக மேம்பாட்டு நிதியிலிருந்து, விளை நிலங்களையொட்டி, கான்கிரீட் வரப்பு அமைக்க வேண்டும். அப்போதுதான், மழைக் காலங்களில் தண்ணீரோடு மண் கலந்து வயல்களில் உட்புகுவது தடுக்கப்படும்' என்றார்.

மூலக்கதை