அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா

தினமலர்  தினமலர்
அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா

பீஜிங்: 'அருணாச்சல பிரதேசம், எங்களுடைய எல்லைக்குட்பட்டது. அங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்வதை யாரும் எதிர்க்க முடியாது' என, நம் அண்டை நாடான சீனா, மீண்டும் அடாவடியாக தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக் எல்லை பகுதியில், அத்துமீறி, சீன ராணுவம் நுழைந்ததையடுத்து, இரு நாட்டு படைகளும் எட்டு மாதங்களுக்கு மேலாக குவிக்கப்பட்டுள்ளன. பல சுற்று பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.


இந்நிலையில், நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில், ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கி வருகிறது. அங்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.அருணாச்சல பிரதேசத்தை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள திபெத்தின் ஒரு பகுதி என, சீனா தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் அங்கு கட்டுமானம் மேற்கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை