பங்கு வெளியீட்டில் ‘ஸ்டவ் கிராப்ட்’

தினமலர்  தினமலர்
பங்கு வெளியீட்டில் ‘ஸ்டவ் கிராப்ட்’

புதுடில்லி:சமயலறை சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், ‘ஸ்டவ் கிராப்ட்’ நிறுவனம், 25ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளது.

மேலும், ஒரு பங்கின் விலை, 384 – 385 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் போது, 95 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும், நிறுவனர்கள் வசம் இருக்கும், 82.50 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதன் மூலம், இந்நிறுவனம், 413 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்த பங்கு வெளியீடானது, 25ம் தேதி துவங்கி, 28ம் தேதியுடன் முடிவடைகிறது. திரட்டப்படும் நிதியைக் கொண்டு, கடன்களை அடைக்கவும்; பொது நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனம் பீஜியன், கில்மா ஆகிய பிராண்டுகளில் சமையலறை சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்த ஆண்டில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நான்காவது நிறுவனமாகும் இது. ஐ.ஆர்.எப்.சி., இண்டிகோ பெயின்ட்ஸ், ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் வரிசையில் நான்காவதாக, ‘ஸ்டவ் கிராப்ட்’ நிறுவனம் வருகிறது.

மூலக்கதை