மழை நீர் வடியாததால் நெற்பயிர் சேதம் விவசாயிகள் கவலை

தினமலர்  தினமலர்
மழை நீர் வடியாததால் நெற்பயிர் சேதம் விவசாயிகள் கவலை

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் மழையால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாததால் நிலத்திலேயே நெல் மணிகள் முளைப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா பட்டத்தில் 2,000 ஏக்கருக்கும் மேல் நெல் பயிரிடுகின்றனர்.ஆட்கள் பற்றாக்குறை இடுபொருட்கள் விலை உயர்வு விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காதது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கிடையே பயிரிடுகின்றனர்.அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு பெய்த கன மழையால் பயிர்கள் நீரில் மூழ்கின.

பெல்ட் பொறுத்திய இயந்திரம் மூலமே அறுவடை செய்ய முடியும். இதற்கு ஏக்கருக்கு கூடுதலாக 3,000 ரூபாய் செலவாகும். இதில் வைக்கோல் முற்றிலும் சேதமாகிவிடும். நெல்லும் 25 சதவீதம் வீணாகிவிடும்.தண்ணீர் சூழ்ந்துள்ள நெற்பயிரை அறுவடை செய்ய முடியாததால் நிலத்திலேயே முளைக்க துவங்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மூலக்கதை