காப்பீட்டு நிறுவனங்கள் தத்து எடுக்க வேண்டும்

தினமலர்  தினமலர்
காப்பீட்டு நிறுவனங்கள் தத்து எடுக்க வேண்டும்

புதுடில்லி:காப்பீட்டு நிறுவனங்கள், தங்களுக்கு விருப்பமான ஒரு மாவட்டத்தை தத்து எடுத்துக் கொள்ளுமாறு, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தலைவர் எஸ்.சி.குந்தியா கூறியுள்ளார்.

நாட்டில் காப்பீடு குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால், காப்பீட்டு நிறுவனங்கள் ஏதாவது ஒரு மாவட்டத்தை தத்து எடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:ஆயுள் காப்பீட்டை பொறுத்த வரை, இந்தியாவில் அதன் பங்களிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.6 சதவீதமாக உள்ளது.

இதுவே, உலகளவிலான சராசரி, 7.13 சதவீதமாக உள்ளது.பொது காப்பீடு இன்னும் மோசம்; 0.94 சதவீதம் என்ற அளவில் தான் உள்ளது. உலக சராசரி, 2.88 சதவீதமாக இருக்கிறது. எனவே, மக்களிடம் காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை