அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 12 காளைகளை அடக்கிய கண்ணனுக்கு கார் பரிசு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 12 காளைகளை அடக்கிய கண்ணனுக்கு கார் பரிசு

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரையில் நேற்று நடைபெற்றது. இதனை முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர்  திரு.ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தனர். காலை 9மணி முதல் மாலை 5மணி வரை நடைபெற்ற இந்த போட்டியில் 49 காளைகள் வாடி வாசல் வழியாகத் தாவிப் பாய்ந்தன. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் சாமர்த்தியமாக அடக்கினர். சில காளைகள் வீரர்களை சிதறிஓடச் செய்தன. ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களைச் சிதறச் செய்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. அவ்வகையில் வீட்டுக்குத் தெரியாமல் வந்து ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர் கண்ணன் 12 மாடுகளை அடக்கி ‘சிறந்த மாடுபிடி வீரர்’ என்ற பட்டம் பெற்று, காரினை பரிசாகப் பெற்றார். அதே போல் சிறந்த காளையின் உரிமையாளராக குருவித்துறையைச் சேர்ந்த சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டார். அவரின் சிறந்த காளைக்காக கார் பரிசாக வழங்கப்பட்டது.

மூலக்கதை