வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் டிரம்ப்:

தினமலர்  தினமலர்
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் டிரம்ப்:

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், இன்று (ஜன, 20) பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்த டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்தாண்டு நவம்பரில் நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் 46-வது அதிபராக அதிபராக இன்று (ஜன, 20) பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.


இந்நிலையில் பதவி விலக உள்ள டிரம்ப், ஜோபைடனுக்கு வாழ்த்து தெரிவித்து பேட்டியளித்தார். முன்னதாக ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கமாட்டேன் என அறிவித்திருந்தார். இதையடுத்து இன்று வெள்ளை மாளிகையிலிருந்து தனது மனைவி மெலானியா டிரம்ப்புடன் வெளியேறினார். அவருக்கு 21 குண்டுகள் முழங்க அவரை வழியனுப்பி வைக்கப்பட்டார். இதன் மூலம் பதவியேற்பு விழாவை புறக்கணித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயர் பெற்றார்.மூலக்கதை