ஜோ பைடன் இன்று பதவியேற்பு

தினமலர்  தினமலர்
ஜோ பைடன் இன்று பதவியேற்பு


வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், இன்று (ஜன, 20) பதவியேற்க உள்ளார். தலைநகர் வாஷிங்டனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்காவின்
46-வது அதிபராக அதிபராக ஜோ பைடன் இன்று (ஜன, 20) பதவியேற்க உள்ளார். இதையடுத்து தலைநகர் வாஷிங்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது.

முன்னதாக தலைநகர் வாஷிங்டனில், பதவியேற்பு விழா நடக்கவுள்ள, 'கேப்பிடோல்' எனப்படும், அமெரிக்க பார்லிமென்ட் கட்டடத்தின் முகப்பில், 'டைல்ஸ்'களை பயன்படுத்தி, அமெரிக்கவாழ் இந்தியர்கள், பிரமாண்ட கோலங்களை உருவாக்கி உள்ளனர்.
பதவியேற்பு விழாவின் போது டிரம்ப் ஆதரவாளர்களால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள, 25 ஆயிரம், 'நேஷனல் கார்ட்' எனப்படும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை