நிவாரணம் ! மழையால் பயிர்கள் சேதம் ....பாதிப்புக்கேற்ப இழப்பீடு கிடைக்கும்

தினமலர்  தினமலர்
நிவாரணம் ! மழையால் பயிர்கள் சேதம் ....பாதிப்புக்கேற்ப இழப்பீடு கிடைக்கும்

மதுரை : மதுரை மாவட்டத்தில் சமீபத்திய தொடர் மழையால் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சேதம் அடைந்த நிலையில், 50 சதவீதம் பேர் மட்டுமே பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

இவர்களுக்கு இன்சூரன்ஸ் இழப்பீடும், அரசு நிவாரணமும் வழங்கப்படவுள்ளது.அதிகபட்சமாக மதுரை மேற்கு தாலுகாவில் 785 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வாடிப்பட்டியில் 780, செல்லம்பட்டியில் 730, அலங்காநல்லுாரில் 662, கிழக்கில் 400, மேலுாரில் 320, திருப்பரங்குன்றத்தில் 92, கொட்டாம்பட்டியில் 80, டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டியில் தலா 30, சேடபட்டி, கள்ளிக்குடியில் தலா 20 ஏக்கர் மற்றும் திருமங்கலத்தில் 3 ஏக்கர் என 10ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.

மாவட்டத்தின் மொத்த விவசாயப்பரப்பு ஒரு லட்சத்து 75ஆயிரம் ஏக்கர். இதில் 50 சதவீதம் இன்சூரன்ஸ் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பருவத்தின் கீழ் நெல் 9,117 ஏக்கர், மக்காச்சோளம் 46,305 ஏக்கர், பருத்தி 4,028 ஏக்கர் என 51ஆயிரத்து 350 ஏக்கர் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. 2020 - 2021 ல் 66ஆயிரத்து 616 ஏக்கரில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இது 76 சதவீதம் தான்.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், கள்ளிக்குடியில் மானாவாரி சாகுபடி என்பதால் இங்குள்ள விவசாயிகள் இன்சூரன்ஸின் அருமை உணர்ந்துள்ளனர். மற்ற இடங்களில் தண்ணீர் கிடைப்பதால் பாதிப்பு வராது என்ற நம்பிக்கையில் இன்சூரன்ஸ் செய்வதில்லை.

தற்போது ஏற்பட்டுள்ள 10ஆயிரம் ஏக்கர் பாதிப்பில் 50 சதவீத அளவே இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. முழுமையான சேதம் என்றால், வங்கி நிர்ணயித்துள்ள சாகுபடி செலவாக ஏக்கருக்கு ரூ.31ஆயிரம் கிடைக்கும். அல்லது சேதத்தின் தன்மைக்கேற்ப சதவீத அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும். இது தவிர அரசின் நிவாரணத் தொகையும் கிடைக்கும்.

மூலக்கதை