பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா!!

தினகரன்  தினகரன்
பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா!!

பெய்ஜிங்: உலகம் வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை சீனா போர்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகம் முழுவதும்  விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சீனாவில் கிளேஷியர் எனப்படும் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க விஞ்ஞானிகள் போர்வைகளை பயன்படுத்தி வருகின்றனர். பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க உயர் தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஜியோடெக்ஸ்டைல் போர்வைகள், சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக இருக்கும்.இதை பனிக்கட்டிகளின் மேல் போர்த்துவதால் பனிக்கட்டி உருகும் வேகம் குறையும். மேலும் பனிக்கட்டிகளை பாதுகாக்கும் கேடயமாகவும் இந்த போர்வைகள் இருக்கும் என சீன விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.ஆனால் அது ஆதாரப்பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.வாங்க் பெய்டெங் தலைமையிலான ஆய்வாளர்கள் கடந்த 7 ஆண்டுகளாக இதுகுறித்து ஆய்வுகளை நடத்தி வந்தனர். அந்த முடிவுகளின்படி கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இதை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். சீனாவிலுள்ள சிச்சூவான் மாகாணத்தின் டாகு பனிப்பாறைகள் ஜியோடெக்ஸ்டைல் போர்வைகளை 500 சதுர மீட்டர் அளவிறகு உருவாக்கி இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மூலக்கதை