நகை விற்பனை அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
நகை விற்பனை அதிகரிப்பு

கோல்கட்டா:தங்கத்தின் விலை குறைந்து வருவதால், தங்க நகைகளுக்கான தேவை, நடப்பு மாதத்தில், 10 – 20 சதவீதம் அதிகரித்துஉள்ளது.

வரும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில், அதிகளவில் திருமணங்கள் நடக்கும் என்பதால், தங்க நகைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என, இத்துறையை சேர்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவித்துஉள்ளனர்.

மேலும், பல திருமணங்கள் கொரோனாவை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்டதால், அவையும் இந்த மாதங்களில் நடைபெறும் என்பதால், தேவை நன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், கொரோனாவுக்கான தடுப்பூசி அறிமுகம் ஆகியுள்ளதும் தேவையை அதிகரிக்க உதவும் என கருதப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால், தங்கத்தின் விலை குறைந்துள்ளதை அடுத்து, விற்பனையும், 10 – 20 சதவீதம் இந்த மாதத்தில் அதிகரித்துள்ளது. இருப்பினும், தங்கத்தின் தேவை, நகரங்களில் அதிகரித்துள்ளதாகவும், இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் இன்னும் அதிகரிக்க துவங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை