கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் ட்விட்

தினகரன்  தினகரன்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன் என மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிந்தேன். அவர் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன். பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் உடல்நிலை பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை