4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா சாதனை: பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 9-வது முறையாக கைப்பற்றியது இந்தியா

தினகரன்  தினகரன்
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 21 என்ற கணக்கில் வென்று இந்தியா சாதனை: பார்டர்கவாஸ்கர் கோப்பையை 9வது முறையாக கைப்பற்றியது இந்தியா

பிரிஸ்பேன்: 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. பரப்பரப்பான ஆட்டத்தில் 327 ரன்கள் இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் வீரர் ரிஷாப் பந்த் 80 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார். அறிமுக வீரரான வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டியின் முதல் நாளில் ஆஸி. அணி 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களை எடுத்தது. மேலும் 2-வது ஆட்டம் 16-ம் தேதி நடைபெற்றது. மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் அறிமுக பவுலர்களான தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது புஜாரா 8 ரன்னுடனும், ரஹானே 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் கடைசி பகுதி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 17-ம் தேதி நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டெஸ்ட் அரை சதத்தை பதிவு செய்தார். எனவே இந்திய அணி இந்திய அணி 336 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 33 ரன்கள் பின் தங்கியுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 67 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும் எடுத்துள்ளனர். 33 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்து இருந்தது. நேற்று நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் 54 ரன்கள் முன்னிலை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. நேற்று ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக வார்னர் 48 ஹரிஸ் 38, ஸ்மித் 55 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் சிராஜ் 5 விக்கெடும் தாகூர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் 327 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது. ஆட்டம் ஆரம்பித்த சிறுது நேரத்தில் மழை பெய்ததால் 4-வது நாள் ஆட்டம் முடித்து வைக்கப்பட்டது. 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது.

மூலக்கதை