ஆன்லைனில் காப்பீடு பெறுவதில் ஆர்வம்

தினமலர்  தினமலர்
ஆன்லைனில் காப்பீடு பெறுவதில் ஆர்வம்

இந்தியர்கள் மத்தியில் ஆன்லைனில் காப்பீடு வசதியை நாடுவதற்கான ஆர்வம் அதிகரித்திருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசு கொள்கை மற்றும் ‘டிஜிட்டல்’ வசதிகள் இதற்கு காரணமாக அமைந்துள்ளன.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில், ‘சுவிஸ் ரே’ நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்திய பங்கேற்பாளிகளில், 65 சதவீதத்தினர் எதிர்காலத்தில் டிஜிட்டல் வாலெட்கள், ஆன்லைன் மற்றும் வங்கி, காப்பீடு நிறுவன இணையதளங்கள் வாயிலாக, காப்பீடு பாலிசிகளை வாங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.


ஆன்லைனில் காப்பீடு பாலிசிகளை பெறுவதற்கான டிஜிட்டல் வசதிகள் மற்றும் கொரோனா சூழலில் பலரும் நேரடியாக தொடர்பில்லாத வகையில் சேவைகளை நாடும் தன்மை ஆகியவை, ஆன்லைனில் காப்பீடு பெறும் ஆர்வத்தை உண்டாக்கியுள்ளன.இந்திய பயனாளிகளில் பெரும்பாலானோர், ‘இ – -காமர்ஸ்’ தளங்கள் மற்றும் டிஜிட்டல் வாலெட்கள் வாயிலாக காப்பீடு பாலிசி வாங்குவதை அதிகம் விரும்புவதாக தெரிவித்து உள்ளனர்.


அதே நேரத்தில் ஆன்லைனில் காப்பீடு பெறும் போது, சரியான தேர்வை மேற்கொள்வது கடினமாக இருப்பதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர். பாலிசி நிபந்தனைகளை விளக்குவதற்கு ஏஜென்ட்கள் இல்லாதது, ஒரு குறையாக அமைவதாகவும் பலரும் குறிப்பிட்டு உள்ளனர்.

மூலக்கதை