2ம் போக நெல் சாகுபடிக்கு கை கொடுத்த மழை

தினமலர்  தினமலர்
2ம் போக நெல் சாகுபடிக்கு கை கொடுத்த மழை

கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் 2ம்போக நெல் சாகுபடிக்கான பணிகளை தயக்கத்துடன் துவக்கிய விவசாயிகள் மழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்ததால் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதமாகவே சாரல் மழை பெய்து வந்தபோதும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்தது. இந்நிலையில் கடந்த ஒருவாரமாக பெய்த மழையால் இந்த அணை நீர்மட்டம் 129 அடியை தாண்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் தடங்கலின்றி 2ம்போக நெல் சாகுபடி செய்ய முடியும். அதற்கு உத்தரவாதம் தரும் வகையில் அணைநீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மூலக்கதை