200 யூனிட் ரத்த தானம் ஆலோசனை கூட்டம்

தினமலர்  தினமலர்
200 யூனிட் ரத்த தானம் ஆலோசனை கூட்டம்

திருப்பரங்குன்றம் : மதுரை ஜீவநதி அறக்கட்டளையினர் ஜன., 26 அன்று மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு 200 யூனிட் ரத்தம் தானமாக வழங்க உள்ளனர். அதற்கான ஆலோசனை கூட்டம் நிர்வாக அறங்காவலர் கணேஷ்முருகன் தலைமையில் நடந்தது. பொருளாளர் குப்புராஜ், அறங்காவலர்கள் மகேந்திரகுமார், ஆனந்தகுமார், கண்ணன் முன்னிலை வகித்தனர். அறங்காவலர் மாரிமுத்து வரவேற்றார். தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அறங்காவலர் சேது அருணாசலம் நன்றி கூறினார்.

கொரோனா தடை உத்தரவால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ரத்ததானம் வழங்க இயலாத நிலையில் உள்ளனர். அதனால் அறக்கட்டளை சார்பில் ஜன.,26ல் ரத்ததான முகாம் வசந்தநகர் தியாகராஜர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. ரத்தம் தானம் செய்ய விரும்புவோர் 98437 20304ல் விபரம் அறியலாம்.

மூலக்கதை