மகிழ்ச்சி! காணும் பொங்கல் கொண்டாட்டம் ... நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்

தினமலர்  தினமலர்
மகிழ்ச்சி! காணும் பொங்கல் கொண்டாட்டம் ... நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்

செங்குன்றம் : பொது இடங்களில், காணும் பொங்கல் கொண்டாட தடை விதிக்கப்பட்டதால், உள்ளூர் ஏரிக் கரைகளில் மக்கள் கூடி, பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழகமெங்கும், பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வழக்கமாக, பொங்கல் விடுமுறை நாட்களில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் வண்டலுார் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம், பொருட்காட்சி போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்று, மக்கள் கொண்டாடி மகிழ்வர். இந்தாண்டு, கொரோனா பரவலை தடுக்க, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், எந்த பொழுது போக்கும் இல்லாததால், பொங்கல் கொண்டாட்டத்திற்காக, பொதுமக்கள், சினிமா தியேட்டர் மற்றும் மால்களுக்கு சென்றனர்.

புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள், புழல் ஏரி, மாதவரம் ரெட்டேரி, கொரட்டூர் ஏரி, ஆவடி பருத்திப்பட்டு ஏரி என, உள்ளூர் ஏரிகளுக்கு, உறவினர், நண்பர்களுடன் சென்று, காணும் பொங்கலை கொண்டாடினர். சிலர், ஏரிகளின் கலங்கல் பகுதிகளில் குளித்தனர்.ஏரிகள், பருவ மழையால், முழு அளவு நிரம்பியது. அதனால், பலரும், 'செல்பி' எடுத்தனர். பொதுமக்கள் வருகையால், ஏரிக்கரை அருகே பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட நொறுக்கு தீனி கடைகள் முளைத்தன.

மூலக்கதை