உலக தொழில்நுட்ப மையங்களில் முதலிடத்தை பிடித்தது பெங்களூரு

தினமலர்  தினமலர்
உலக தொழில்நுட்ப மையங்களில் முதலிடத்தை பிடித்தது பெங்களூரு

புதுடில்லி:உலகின் மிக வேகமாக வளரும் தொழில்நுட்ப மையங்களில், முதலிடத்தை பெங்களூரு பிடித்துள்ளது.

பெங்களூருக்கு அடுத்து, லண்டன், மியுனிச், பெர்லின், பாரீஸ் ஆகிய இடங்கள் உள்ளன. மும்பைக்கு, ஆறாவது இடம் கிடைத்துள்ளது.கடந்த, 2016ம் ஆண்டிலிருந்து, தொழில்நுட்ப வணிகத்தில் முன்னேறி வரும் இடங்கள் குறித்த ஆய்வில், இவ்வாறு தெரிய வந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில், பெங்களூரில் முதலீடுகள், 5.4 மடங்கு அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டில் இது, 5,110 கோடி ரூபாயாக இருந்தது, 2020ல், 52 ஆயிரத்து, 560 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மும்பையில் முதலீடு, 1.7 சதவீதம் அதிகரித்துள்ளது.இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் லண்டன், மூன்று மடங்கு வளர்ச்சியைப் பிடித்துள்ளது.

பெங்களூரு, லண்டன் ஆகிய இரு நகரங்களும், துணிகர முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னணியில் உள்ளன.இந்தியா முழுதும் உள்ள நகரங்களுடன், லண்டன் வலுவான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவைக் கொண்டுஉள்ளது. இதன் அடிப்படையில், இந்தியா – லண்டன் இடையே, தொழில்நுட்பம் சார்ந்த கூட்டு முயற்சிகள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

மூலக்கதை