ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் பிப்., வரை அவகாசம்

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் பிப்., வரை அவகாசம்

சென்னை:கடந்த, 2019 – 20ம் நிதியாண்டுக்கான படிவம், ‘ஜி.எஸ்.டி., ஆர்., 9’ என்ற, ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் இருக்கின்றன. இதில், ஆண்டு முழுவதுக்கும் ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ உள்ளது. ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு கீழ், வரவு – செலவு உள்ள அனைத்து வணிகர்களும், படிவம் – 9 தாக்கல் செய்ய வேண்டும்.

இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரவு – செலவு உள்ள நிறுவனங்கள், ‘படிவம் – 9ஏ’ மற்றும் ‘9சி’ தாக்கல் செய்ய வேண்டும். 2019 – 20ம் நிதியாண்டுக்கான, படிவம் – 9 மற்றும் 9சி தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2020 டிச., வரை இருந்தது. வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்று, பிப்., 28 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்குள் தாக்கல் செய்யவில்லையெனில், அபராதத்துடன் தாக்கல் செய்ய வேண்டும் என, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறினர்.

மூலக்கதை