கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு

தினமலர்  தினமலர்
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு

புதுடில்லி:கொரோனா தொற்று நோயையும், அதனால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளையும் சமாளிக்க, மிகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை, இந்தியா எடுத்துள்ளது என, பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா கூறியுள்ளார்.

முயற்சி

மேலும், பொருளாதாரத்தில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்த, இந்த ஆண்டிலும் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியா, தொற்று நோயையும், அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளையும் சமாளிக்க, உண்மையிலேயே மிகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஊரடங்குமிக அதிக அளவில் மக்கள் தொகையை கொண்ட ஒரு நாட்டில், ஊரடங்குகள் அறிவித்து, கடைப்பிடிப்பது என்பது வியக்கத்தக்க விஷயமாகும்.இதன் பின், இலக்குகளுடன் கூடிய கட்டுப்பாடுகளையும், ஊரடங்குகளையும் இந்தியா அறிவித்தது. இதனால், பொருளாதார நடவடிக்கைகள் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் புத்துயிர் பெற்றன.நிதிக் கொள்கைகள் விஷயத்தில் அரசு செய்துள்ளவை பாராட்டத்தக்கது.

இந்த நடவடிக்கைகள், உண்மையில் வளர்ந்து வரும் நாடுகளின் சராசரியை விட அதிகமாகும்.வளர்ந்து வரும் நாடுகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதத்தை சலுகைகளாக வழங்கி உள்ளன. இந்தியாவில் இது சற்று அதிகமாகவே உள்ளது. இன்னும் பலவற்றை செய்ய இடம் இருக்கிறது. இன்னும் அதிகம் செய்ய முடிந்தால், தயவு செய்து செய்யுங்கள். இவ்வாறு கூறிஉள்ளார்.

மூலக்கதை