மாஸ்டர் பற்றி ஈஸ்வரன் டைரக்டர் சுசீந்திரன் டுவீட்

தினமலர்  தினமலர்
மாஸ்டர் பற்றி ஈஸ்வரன் டைரக்டர் சுசீந்திரன் டுவீட்

சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தை இயக்கியிருக்கும் சுசீந்திரன், விஜய்யின் மாஸ்டர் படத்தின் முதல் காட்சியை தனது சொந்த ஊரில் பார்த்து விட்டு அதுகுறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், மகிழ்ச்சியா உள்ளது. மாஸ்டர் படத்தை எங்கள் சொந்த ஊரில் உள்ள ஒரு தியேட்டரில் பார்த்து ரசித்தேன். துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய்யின் மாஸ்டர் பீஸாக இந்த படம் அமைந்துள்ளது. விஜய்யின் நடிப்பு பிரமாதம். இதுபோன்ற ஒரு கதையை விஜய்க்கு கொடுத்த லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி. திரைக்கதை தொடங்கி நடிகர் நடிகைகள் வரை சரியாக தேர்வு செய்திருக்கிறார். குறிப்பாக, விஜய் சேதுபதி வில்லத்தனத்தை ரசிக்கும்படி செய்திருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. படக் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

மூலக்கதை