பஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்

தினமலர்  தினமலர்
பஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்

பேட்ட மற்றும் மாஸ்டர் என இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகி அந்தஸ்த்துக்கு உயர்ந்திருப்பவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். பொங்கல் ரிலீஸாக இவர் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியாகியுள்ள நிலையில் பஹத் பாசிலுடன் ஜோடியாக நடித்து நின்றுபோன படம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார் மாளவிகா. கடந்த 2013ல் பட்டம்போலே என்கிற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமான மாளவிகா மோகனனுக்கு 2015ல் பஹத் பாசில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது.

பழங்குடி இன மக்கள் இன்று சந்தித்துவரும் பொருளாதார ரீதியான பிரச்சனைகளையும் பற்றிய கதையம்சத்துடன் உருவாகி இருந்த, அந்தப்படத்தில் ஆதிவாசிப்பெண்ணாக நடித்தார் மாளவிகா மோகனன். கிட்டத்தட்ட 20 நாட்கள் அந்தப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது. இன்னும் 30 சதவீத காட்சிகளே படமாக்கப்பட்ட வேண்டும் என்கிற நிலையில் திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, எந்த காரணங்களும் தெரியப்படுத்தாமல் அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டது என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.

மூலக்கதை