சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை: பொன்னாம்பலமேட்டில் ஜோதி தரிசனம்: சரண கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்..!

தினகரன்  தினகரன்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை: பொன்னாம்பலமேட்டில் ஜோதி தரிசனம்: சரண கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்..!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பொன்னாம்பலமேட்டில் மகரஜோதியை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர விளக்கு பூஜை கோலாகலமாக நடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் ஜோடி வடிவத்தில் காட்சி கொடுத்த ஐயப்பனை சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்குப் பூஜைத் திருவிழா 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது.ஆண்டுதோறும் மகர ஜோதி தரிசனத்துக்காக சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். பொன்னம்பலமேட்டில் தீப ஜோதியாக காட்சி தரும் ஐயப்பனை தரிசிப்பதற்காக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, என கேரளாவை கடந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள்.ஆனால் வரலாற்றிலேயே முதன் முறையாக இந்தாண்டு கொரோனா காரணமாக 5,000 பக்தர்களுக்கு மட்டுமே மகர ஜோதி தரிசனத்துக்கு தேவஸம் போர்டு அனுமதி அளித்துள்ளது. அதுவும் கொரோனா நெகட்டின் என்ற பரிசோதனை சான்றிதழை நிலக்கல் மற்றும் பம்பாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம் அலுவலர்களிடம் காட்டிய பிறகே அனுமதி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கொரோனா பிரச்சினை காரணமாக தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலை செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்து உள்ளார். மகர ஜோதிக்கு முன்னர் நடைபெறும் பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண ஊர்வலத்தில் 50 பக்தர்களுக்கே திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பொன்னாம்பலமேட்டில் தொடர்ந்து 3 முறை மகரஜோதி ஒளிர்ந்தது. அதை கண்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகரஜோதியை காண பக்தர்கள் அட்டத்தோடு, பஞ்சிப்பாறை, இலவுங்கல் உள்ளிட்ட இடங்களில் குவிந்ததால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மூலக்கதை