தெலுங்கு படத்துக்காக வெயிட் போடும் கீர்த்தி சுரேஷ்!

தினமலர்  தினமலர்
தெலுங்கு படத்துக்காக வெயிட் போடும் கீர்த்தி சுரேஷ்!

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடி படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் அதையடுத்து பென்குயின், மிஸ் இந்தியா படங்களைத் தொடர்ந்து குட்லக் சகி என்ற படத்திலும் தற்போது கதையின் நாயகியாக நடித்து முடித்துள்ளார்.

இதையடுத்து தெலுங்கில் பரசுராம் இயக்கும் படத்திலும் கதையின் நாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ், இந்த படத்திற்காக கூடுதல் வெயிட் போட்டு நடிக்கப் போகிறார். இப்போது இருப்பதை விட குறைந்தது 10 கிலோ வெயிட்டாவது போடவேண்டும் என்று டைரக்டர் கூறியிருப்பதால், உடல் எடையை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

மூலக்கதை