சிம்பு படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ

தினமலர்  தினமலர்
சிம்பு படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ

கன்னடத்தில் வெளியான முப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இன்னொரு ஹீரோவாக மெட்ராஸ் கலையரசனும் இணைந்துள்ளார்.

இவர்களுடன் பிரியா பவானி சங்கர், அசுரன் படத்தில் நடித்த தீஜே அருணாச்சலம் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிப்பதாக, பத்துதல படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து இயக்குநர் கிருஷ்ணா கூறியதாவது : மிகவும் கனமான 'அமீர்' எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் கலையரசன். படத்தில் சிறிது நேரமே வந்தாலும் நிறைய அழுத்தம் தரும் பாத்திரம். கலையரசனை அணுகும்போது முதலில் இப்படத்திற்கு ஒப்புக்கொள்வாரா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் படத்தில் கதாப்பாத்திரத்தின் அழுத்தம் அறிந்து அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார் என்றார்.

மூலக்கதை