இளம் கிரிக்கெட் வீரரின் சாதனையை பாராட்டிய நிவின்பாலி

தினமலர்  தினமலர்
இளம் கிரிக்கெட் வீரரின் சாதனையை பாராட்டிய நிவின்பாலி

சமீபத்தில் கேரளாவில் சையத் முஸ்தாக் அலி ட்ராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கேரள அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடைபெற்ற டி-20 கிரிக்கெட் போட்டியில் கேரள அணியை சேர்ந்த முகமது அசாருதீன் என்கிற இளம் கிரிக்கெட் வீரர் 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இவர் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போது நடிகர் நிவின்பாலி இவருக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

முகமது அசாருதீனின் படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிவின்பாலி, இது குறித்து கூறும்போது, “என்ன ஒரு அடி அசாருதீன்....!! வாழ்த்துக்கள் பிரதர்” என கூறியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான 1983 என்கிற படத்தில் கிராமத்து கிரிக்கெட் வீரராக நிவின்பாலி நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை