சயீத்தின் உதவியாளர்களுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை

தினமலர்  தினமலர்

லாகூர்:பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டில் ஜமாத் - உத் - தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் உதவியாளர்கள் இருவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம்15 ஆண்டு சிறை தண்டனை விதித்துஉள்ளது.

கடந்த 2008 நவ. 26ல் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் இறந்தனர்.இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத் - உத் - தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத். இவரை ஐ.நா. சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.இவர் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டார்.

சயீத் தற்போது லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சயீத்தின் நெருங்கிய உதவியாளர்களான யாஹ்யா முஜாஹித் ஜாபர் இக்பால் ஆகியோருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.மேலும் சயீத்தின் மைத்துனர் அப்துல் ரஹ்மான் மக்கிக்கு ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மூலக்கதை