சீனாவின் அத்துமீறலை திறமையாக தடுக்கிறது இந்தியா: அமெரிக்கா

தினமலர்  தினமலர்
சீனாவின் அத்துமீறலை திறமையாக தடுக்கிறது இந்தியா: அமெரிக்கா

வாஷிங்டன்:'சீனாவின் எல்லை அத்துமீறலை இந்தியா தன் வலிமையால் திறமையாக தடுக்கிறது' என அமெரிக்கா பாராட்டியுள்ளது.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு பற்றிய ரகசிய அறிக்கையை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஒ பிரையன் வெள்ளை மாளிகை வலை தளத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பாதுகாப்பு பிரச்னைகளில் இணைந்து செயல்பட அமெரிக்காவிற்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கடற் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த சீனா துடிக்கிறது. இந்தியா தன் வலிமையால் சிறப்பாக தடுக்கிறது.தெற்காசியப் பிராந்தியம் இந்தியப் பெருங்கடல் பகுதியை பாதுகாப்பதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

வலிமையான இந்தியா

ஒத்த கருத்துள்ள நாடுகளுடன் இணைந்து செயல்படும்பட்சத்தில் சீனாவுக்கு தகுந்த பதிலடியை கொடுக்க முடியும்.அணுசக்தி உற்பத்திக்கான மூலப்பொருட்களை வழங்கும் குழுவில் இந்தியா உறுப்பினராக அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும். இந்தியாவுடன் எரிசக்தி தொழில்நுட்பம் விண்வெளி மற்றும் கடல்சார் பாதுகாப்பு புலனாய்வு தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை