விமானப்படைக்கு மேலும் வலுசேர்க்க 83 தேஜஸ் விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: ரூ.48 ஆயிரம் கோடியில் திட்டம்

தினகரன்  தினகரன்
விமானப்படைக்கு மேலும் வலுசேர்க்க 83 தேஜஸ் விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: ரூ.48 ஆயிரம் கோடியில் திட்டம்

புதுடெல்லி: விமானப்படைக்கு வலுசேர்க்கும் வகையில் ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு துறை தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இதில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 83 இலகுரக தேஜஸ் போர் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேஜஸ் விமானத்தில் தற்போது பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இவற்றைபொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனம் தயாரித்து உற்பத்தி செய்கிறது. எல்லையில் பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து இந்தியாவுக்கு தொல்லைகள் கொடுத்து வருகின்றன. இதனால், இருநாடுகளையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருப்பதால், ராணுவத்துக்கு சமீப காலமாக கூடுதல் வலிமை சேர்க்கப்பட்டு வருகிறது. பிரான்சிடம் இருந்து வாங்கப்படும் ரபேல் போர் விமானங்களும் தற்போது விரைவாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை