தடுப்பூசி குறித்த வதந்திகள் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
தடுப்பூசி குறித்த வதந்திகள் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

திருச்சி:''கோவிஷீல்டு தடுப்பூசி குறித்து, வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட, 5 லட்சத்து 36 ஆயிரத்து, 500 கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள், சென்னை வந்தன. அங்கிருந்து, மற்ற சுகாதார மண்டலங்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகள், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பெரம்பலுார், அரியலுார், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம் ஆகிய சுகாதார மாவட்டங்களுக்கு, 68 ஆயிரத்து, 800 தடுப்பூசி மருந்துகள் திருச்சி வந்துள்ளன.

நேற்று, திருச்சியில் இருந்து, அந்தந்த மாவட்டங்களுக்கு தடுப்பூசி மருந்துகளை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனுப்பி வைத்தார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில், முதல் கட்டமாக, 307 இடங்களில், 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு, 100 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டவுடன் நோய் எதிர்ப்பு சக்தி வந்து விடும் என்று எண்ணிவிடக் கூடாது.

தடுப்பூசி முதல் டோஸ் போட்ட, 28வது நாளில், 2வது டோஸ் போட வேண்டும். தொடர்ந்து, 2 டோஸ் தடுப்பூசி போட்டு, 42 நாட்களுக்கு பிறகே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தடுப்பூசி பற்றி தவறான தகவல்களை, சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவசியம் ஏற்பட்டால், நம்பிக்கையூட்டுவதற்கு, அதற்கான அனுமதி பெற்று, நானே போட்டுக் கொள்வேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

சரக்கு அடிக்காதீங்க


அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், பொதுவாக எந்த மருந்து எடுத்துக்கொண்டாலும் மது அருந்தக்கூாடது.இது தடுப்பூசி, ஆகையால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள், அடுத்து வரும் 42 நாட்களுக்கு மது அருந்தவே கூடாது.அப்படி மது அருந்தினால் தடுப்பூசியால் பயன் இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாதுஎன்றார்.

இரு முறைப்போடப்படும்.


கொரோனா தடுப்பூசி பற்றி மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் நேற்று முன்தினமண போடப்பட்டு 14 நாட்களுக்கு பின் அதன் பலன் தெரியும். மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பு மிக்கவை என மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை