இந்தியா கொரோனா நிலவரம்: 24 மணி நேரத்தில் 16,946 பேருக்கு தொற்று; 17,652 பேர் டிஸ்சார்ஜ், 198 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
இந்தியா கொரோனா நிலவரம்: 24 மணி நேரத்தில் 16,946 பேருக்கு தொற்று; 17,652 பேர் டிஸ்சார்ஜ், 198 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.51 லட்சத்தை தாண்டியது. இந்நிலையில், அதே போல், பாதிப்பு 1.05 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,946 பேருக்கு தொற்று உறுதி; இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,05,12,093 ஆக அதிகரித்துள்ளது.* கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 198 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,51,727 ஆக உயர்ந்துள்ளது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 17,652 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,01,46,763 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,13,603 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 96.52% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.44% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.03% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் ஒரே நாளில் 7,43,191 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.* இதுவரை 18,42,32,305 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மூலக்கதை