விவசாய கடன் தள்ளுபடி: ஸ்டாலின் வாக்குறுதி

தினமலர்  தினமலர்
விவசாய கடன் தள்ளுபடி: ஸ்டாலின் வாக்குறுதி

சென்னை ''ஆட்சி பொறுப்பேற்றதும் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்'' என தமிழர் பண்பாட்டு திருவிழாவில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது:தேர்தலில் அனைவரும் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்தவரை தமிழகத்தில் 'நீட்' தேர்வு நுழைய முடியவில்லை. தற்போது அது நுழைந்துள்ளது. ஆட்சி மாற்றம் வந்தவுடன் 'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இன்னும் நான்கு மாதத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். லோக்சபா தேர்தலின் போது கொடுத்தவாக்குறுதியான நகை கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். வேளாண் சட்டங்களால் எந்த தீமையும் இல்லை எனக்கூறி விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறார் முதல்வர். தை பிறந்தால் வழி பிறக்கும். இந்த ஆண்டு வழி பிறந்தே தீரும்.இவ்வாறு பேசினார்.மூலக்கதை